காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் உத்தரவிட்ட பிறகும் உபரி நீரைக் கூட திறந்துவிடாத கர்நாடக அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்காமல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார், கட்டுமானப் பொருட்கள் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளதால் கட்டுமானம் நிறுத்தப்பட்டு கட்டடங்கள் எலும்பு கூடாக காட்சியளிப்பதாக தெரிவித்தார்.