வீடு வீடாக சென்று குடியுங்கள் என்று நாங்களா சொல்கிறோம்? வேண்டாம் என்று தான் விளம்பரம் செய்து வருகிறோம் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு, உடன்பாடு இல்லையென்றாலும் டாஸ்மாக் மது கடைகளை உடனடியாக மூட முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார்.