தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த பண்டிகைக்காக போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து அந்தந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் வழக்கமான கூட்ட நெரிசலை விட வெகு குறைவாகவே இருப்பதாகவும், பேருந்து எளிதில் கிடைப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலித்து வருவதாக ஆம்னி போக்குவரத்து சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.