வேடசந்தூரில் மது போதையில் பேக்கரியை அடித்து நொறுக்கிய அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் கைது செய்யப்பட்டார்.
ஆத்துமேட்டில் உள்ள பேக்கரிக்கு மது போதையில் சென்ற அருண்பாண்டியன் என்பவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு தகராறு செய்துள்ளார். தகவலின பேரில் வந்த போலீசார் விசாரணை நடத்திய போது பேக்கரியில் பிரைட் ரைஸ் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறி போலீசாரிடமும் அருண்பாண்டியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மது போதையில் இருந்த அவரை மறுநாள் காலை போலீஸ் நிலையம் வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். அவர் தலைமறைவான நிலையில் கரூர் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.