நீட் விலக்கு கோரி இதுவரை ஆன்லைன் மூலம் 3 லட்சம் கையெழுத்துகளும், நேரடியாக சுமார் 9 லட்சம் கையெழுத்துகளும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு திரட்டியபின் பேட்டியளித்த உதயநிதி, 50 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறுவதே தங்கள் இலக்கு என்றார்.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவரது அலுவலகத்தில் சந்தித்து நீட் விலக்குக் கோரும் கையெழுத்தை உதயநிதி ஸ்டாலின் பெற்றார்.
கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்.