திருப்பூரில் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி பதிவு வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த டிரைவர் கணேசன், பழனியைச் சேர்ந்த பவளக்கொடி என்பவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் கோவில்வழி பகுதியில் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
பவளக்கொடி வேறு சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனை கணேசன் கண்டித்தும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த பளவக்கொடியை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்ததாக கணேசன் கைது செய்யப்பட்டார்.