தேனி மாவட்டம் போடியில் சகோதரியுடன் சேர்ந்து வாழ மறுத்த மைத்துனரை ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் - சாந்தி தம்பதிக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளனர்.
ராஜேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை சாந்தியின் சித்தி மகன் சிவமூர்த்தி கண்டித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட மோதலில், கறிக்கடையில் வைத்திருந்த கத்தியை எடுத்த சிவமூர்த்தி, ராஜேஸை ஓடஓட விரட்டி வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது.