மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்ட தங்களை அழைத்து வந்து அ.தி.மு.கவின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வைத்ததாக பெண் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழ உரப்பனூரில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றதால், அதிக நபர்களை திரட்டுவதற்காக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 100 நாள் வேலை பணியாளர்களை நாற்காலியில் அமர வைத்ததாக கூறப்படுகிறது.
தங்களை இந்த கூட்டத்திற்காகவே அழைத்து வந்ததாக சில பணியாளர்கள் தெரிவித்ததை செய்தியாளர் பதிவு செய்வதைப் பார்த்ததும் அங்கு வந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் செய்தியாளரை ஒருமையில் பேசியதுடன் தாக்கவும் முற்பட்டார்.