மதுரை, சோழவந்தானில் மனைவி வீட்டிற்கு வராத ஆத்திரத்தில், மாமியார் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி, மூன்று மாத குழந்தையை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாக ராணுவ வீரர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விடுமுறையில் ஊருக்கு வந்த சூரியபிரகாஷ், பிரசவத்திற்காக சென்ற மனைவி கார்த்திகா ராஜுவை வீட்டிற்கு அழைத்து, அவர் வராததால், மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மனைவி புகார் அளித்ததால், அன்று இரவே மீண்டும் மதுபோதையில் வந்து உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
மதுவிற்கு அடிமையாகிய கணவர், தன்னை அடித்து துன்புறுத்தியதோடு, பிறந்த குழந்தைக்கு 10 சவரன் நகை கேட்டு, கணவர், மாமியார், மாமனார் என அனைவரும் வற்புறுத்தியதாக கார்த்திகா ராஜு தெரிவித்துள்ளார்.
தனிக்குடித்தனம் செல்வதற்காக தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக சூரியபிரகாஷ் தெரிவித்துள்ளார்.