மதுரை மேலூர் அடுத்த பெருமாள் மலை குடியிருப்புக்குள் சீற்றத்துடன் புகுந்த குட்டி விலங்கை பூனைக்குட்டி என நினைத்து பால் ஊட்டிய நிலையில், அது கொடும்புலிக் குட்டி என்பது தெரியவந்ததால் அதனை கூண்டில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது
பூனை குட்டி போல இங் பில்லரில் பாலை குடித்துக் கொண்டிருக்கும் இந்த விலங்கு பூனை கிடையாதாம் கொடும்புலி குட்டியாம்..!
மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழிச்சாலை பெருமாள் மலை அருகே, அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 100க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் ஹரிராமர் என்பவருடைய வீட்டில் சிறுத்தை குட்டி போன்று ஒரு விலங்கு பதுங்கியுள்ளது. பூனை என்று கருதி அருகில் சென்று பார்த்தால், சிறிய உருமல் சத்ததுடன் கடுமையாக சீறியுள்ளது.
இதையடுத்து அந்த விலங்கை பிடித்த போது, அது அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. எனினும், அஞ்சாமல் பெண் ஒருவர் அந்த விலங்கை பிடித்து மடியில் கிடத்தி, அதற்கு இங் பில்லரில் பால் ஊட்டினார். அதன் பின்னர் அந்த விலங்கு சாந்தமாகி விளையாட தொடங்கியது. அதை பிடித்து கூண்டில் அடைத்து விட்டு, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மதுரை மாவட்ட வனத்துறை ஆய்வாளர் மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்றனர். அந்த விலங்கை பார்த்த வனத்துறையினர், அது அரியவகை விலங்கான கொடும்புலி என்று தெரிய வந்தது. தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படும் அரியவகை இனமான கொடும்புலி இந்தபகுதிக்கு எப்படி வந்தது ? இதன் தாய்ப்புலி இந்த காட்டில் உள்ளதா? என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.