செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒரு பொலிரோ காரும் அதுக்கு மேல 26 பேரும்.. அலப்பறைய கிளப்புறாய்ங்க..! அமைதி காத்த போலீசார்

Oct 28, 2023 08:45:02 AM

மருது பாண்டியர் குருபூஜைக்கு சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என்று போலீசார் கூறிய நிலையில் ஒரே பொலிரோ காரின் மீது 26 பேர் தொற்றிக் கொண்டும் குதித்தபடியும் சென்றனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 222 ஆவது குருபூஜை விழா சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்துச்சென்று பங்கேற்றனர்.

குருபூஜையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொந்த வாகனங்களில் மட்டுமே மருது பாண்டியர் குருபூஜை விழாவுக்கு செல்ல வேண்டும் என்றும் போக்குவரத்து விதிகளுக்கு கட்டுப்பட்டு வாகனங்களை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சொந்த வாகனங்களில் வந்தவர்கள் அரசு விதிமுறைகளை மீறி வாகனங்களில் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் அலப்பறை செய்தனர்.

சாலையில் அபாயகரமான முறையில் தீப்பந்தம் பிடித்தும் அட்ராசிட்டி செய்தனர்.

பொலிரோ கார் ஒன்றில் பேனட்டில் 3 பேர், காருக்கு மேல் 13 பேர், இருபுறமும் 4 பேர் காருக்கு பின்னால் 3 பேர் காருக்குள் 3 பேர் என்று மொத்தம் 26 பேர் குதியாட்டம் போட்டபடி சென்றனர். அவர்களை மறித்த இரு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

அலப்பறையை கிளப்பிய வாகன ஓட்டி ஒருவரை பிடித்து போலீசார் எச்சரித்த நிலையில் அவருடன் வந்தவர்கள் அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் அதையும் மீறி சில இளைஞர்கள் கார்களில் ஆட்டம் பாட்டத்துடன் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
பெருங்களத்தூரில் ஒரே இரவில் 3 இடங்களில் திருட்டு
தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் நடந்த த.வெ.க. மாநாடு என அமைச்சர் ரகுபதி பேட்டி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
மேட்டூர் அருகே பஞ்சு பொதிகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் தடுப்புச் சுவரில் மோதி விபத்து
ஆசிரியையின் கைகடிகாரத்தை திருடிய மாணவியை தாக்கிய பயிற்சியாளரின் விளக்கம்
குருபூஜை விழாவுக்கு நண்பர்களுடன் காரில் சென்ற இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வாங்க பொதுமக்கள் ஆர்வம்
புதுக்கோட்டையில் அரசுத் தொடக்கப்பள்ளியின் 50ம் ஆண்டு முன்னிட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் திறந்து வைத்தனர்.
தென்காசியில் 100க்கும் மாணவ மாணவிகள் கையில் செடியைப் பிடித்துக் கொண்டு யோகா சாதனை !!
த.வெ.க.வின் முதல் மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறார் !!

Advertisement
Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்

Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?


Advertisement