தமிழகத்தில் 2024ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பட்டியலை வெளியிட்டதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளான ஆட்சியர்கள் பட்டியலை வெளியிட்டனர்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் மற்றும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.