மாமன்னன் இராஜராஜனின் 1038வது ஆண்டு சதய விழாவையொட்டி, தமிழக அரசின் சார்பில் அவரது சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் 48 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு ஓதுவார்களின் திருமுறை பாடலுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழனின் நினைவிடம் என கருதப்படும் இடத்தில் உள்ள சிவலிங்கத்திருமேனிக்கு ஏராளமான பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.