நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்துகளை வாங்கி தி.மு.க.வினர் யாரிடம் வழங்க போகிறார்கள் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நீட் தேர்வுக்கான கையெழுத்து இயக்கம் முடிவதற்குள் தேர்தல் தேதியே அறிவித்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் தமது கட்சி எப்போதும் கூட்டணி வைக்காது என்று கூறியுள்ள சீமான், கட்சி தொடங்க இருக்கும் விஜய், தன்னுடன் வருவாரா இல்லையா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.