உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு 30 சதவீத வரி விலக்கு அளித்ததால் உள்நாட்டில் தயாராகும் தேங்காய் எண்ணெய் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் என்எஸ்என். தனபால் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் பேசிய அவர், மத்திய அரசு ஜிஎஸ்டியில் 5சதவீத வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மாநில அரசு பிற மாநில ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத வரியை திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.