புதுச்சேரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு காங்கிரஸ், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடத்திய மர்ம நபர் கையும்,களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த நபர் காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ மற்றும் லாஸ்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று சோதனை மேற்கொண்டார். அடுத்ததாக உழவர்கரை எம்எல்ஏ சிவசங்கர் இல்லத்திற்கு சென்று சோதனை நடத்திய போது விசாரிக்கையில் அவர் போலி அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தர்ம அடி கொடுத்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் அந்த போலி ED அதிகாரி ஒப்படைக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில் அவர், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்த வரதராஜன் என்பதும் தெரிய வந்துள்ளது.