தமிழகத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு கோடியே 6 லட்சம் பயனாளர்கள் உள்ள நிலையில், அவர்களின் தகுதி மாதம்தோறும் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படும் என்று சிறப்பு திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மின் பயன்பாடு, சொத்து வரி, ரேஷன் உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் காலாண்டு, அரையாண்டுகளில் பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின் அடிப்படையில் பயனாளிகள் குறித்த விவரங்கள் தானாகப் புதுப்பிக்கப்படும் என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், அக்டோபர் மாதத்தில் 5,041 பேர் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 8,833 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.