நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வரும் போது பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்றார்.