அருணகிரிநாதரின் சந்தங்களைப் பயன்படுத்தி பாரதியார்,கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் சில பாடல்களை எழுதியதாகவும், அவரது சந்தங்களை பயன்படுத்தி இளையராஜா சில பாடல்களுக்கு இசையமைத்ததாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பாடல்களை பாடிக் காண்பித்தார்
அருணகிரி நாதரின் சந்தங்களை பயன்படுத்தி இளையராஜா சில பாடல்களை உருவாக்கியதாக கூறி அமைச்சர் ஏ.வ வேலு பாடி காண்பித்த காட்சிகள் தான் இவை..!
திருவண்ணாமலை கிரிவலப்பாதை - செங்கம் சாலை சந்திப்பில் கட்டப்பட்ட அருணகிரிநாதர் மணிமண்டபத்தை திறந்து வைத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல் தொகுப்பில் இடம் பெற்ற ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று.. என்ற சந்தத்தில் இருந்தே மாங்குயிலே பூங்குயிலே பாடலை இளையராஜா அமைத்ததாக குறிப்பிட்டார்.
அதேபோல், அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல் தொகுப்பில் உள்ள பாடலின் சந்தத்தை காப்பியடித்தே பாரதியார் காணிநிலம் வேண்டும் பாடலை அமைத்ததாக எ.வ.வேலு கூறினார்
கவிஞர் கண்ணதாசனும், அருணகிரிநாதர் சந்தத்தை எடுத்தே வாராயோ தோழி வாராயோ.. பாடலை அமைத்ததாகவும் அமைச்சர் பாடிக்காட்டினார்.
சைவ சமயத்தை பரப்பியது 63 நாயன்மார்கள் இருந்த போதிலும், தலைப்புச் செய்திகள் போல் சைவக்குறவர்கள் 4 பேர்தான் முக்கியமானவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் எ.வ.வேலு சந்தங்களை ஒப்பிட்டு பாடல்களை பாடிக்காட்டியதை அங்கு திரண்டிருந்தவர்கள் கைதட்டி வெகுவாக ரசித்தனர்.