பரமக்குடியில் உள்ள இராமநாதபுரம் வெளிப்பட்டணம் சார்பதிவாளர் பெத்துலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச புகார்கள் குறித்து விசாரிக்க, வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சென்றபோது, இடைத்தரகர்கள் மூலம் வசூல் செய்த பணத்துடன் சார்பதிவாளர் பெத்துலட்சுமி பேருந்தில் ஏறி தப்பிக்க முயற்சித்துள்ளார்.
அவரை சுற்றிவளைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அலுவலகத்தை சோதனையிட்டதில் கணக்கில் வராத ஒரு லட்சம் 84 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் சிக்கியதையடுத்து, பெத்துலட்சுமியின் வீட்டிலும் சோதனை நடத்திவருகின்றனர்.