பூ போன்ற காதல் என்ற பெயரில் தான் நடித்து தயாரித்த படத்தை சொந்த செலவில், கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்கில் வெளியிட்ட நடிகர் ஒருவர் , திரையரங்கிற்கு 5 பேர் மட்டுமே பார்க்க வந்ததால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு தலைமறைவாகி உள்ளார்..
டி.ஆர் மாதிரி தமிழ் சினிமாவில் ஆகப்போறேன்னு கடனாளியாகி ஊரை விட்டே ஓடிப்போன இளம் நாயகன் எல்.வி.பிரசாத் இவர் தான்..!
கிருஷ்ணகிரியில் டெயிலர்கடை நடத்திவந்த, பிரசாத்துக்கு , சொந்தமாக படம் தயாரிக்கும் ஆசை வந்துள்ளது. தானே நாயகனாக நடித்து கதை திரைக்கதை இசை தொடங்கி ஆபீஸ் பையன் வரை அனைத்துமாக இருந்து பூ போன்ற காதல் என்ற திரைக்காவியத்தை உருவாக்கி உள்ளார்
இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் இடம் பெறாத திகிலூட்டும் காதல் காட்சிகள் நிறைந்தபடமாக அமைந்துள்ளதால் இந்த படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது.
தன்னம்பிக்கை குடோனான பிரசாத் தான் நடித்த காவியத்தை 5 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்கு ஒன்றில் வெளியிட்டுள்ளார். fdfs பார்க்க சென்றுள்ளார். அங்கு கிரிகாலன் மேஜிக் ஷோ பார்க்க வந்தது போல 5 பேர் மட்டுமே இருந்ததால் இதயம் நொருங்கி உடைந்து கண் நீர் விட்டு கதறி அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்
தமிழ் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பது தவறல்ல, முறையான கதையம்சத்துடன், ரசிகர்களை கவரும் காட்சியமைப்புடன் படங்கள் எடுத்தால் மட்டுமே கை நட்டத்தில் இருந்து தப்பிக்கும், இல்லையென்றால் நம்ம ஊரு நாயகன் பிரசாத் போன்று சூடு பட்ட பூனையாகி தலைமறைவாகும் நிலை தான் ஏற்படும்..! என்கின்றனர் திரையுலகினர்.