2009ஆம் ஆண்டு ஆயிரம் கிலோ போலி மருந்துகளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்த விவகாரத்தில் சிபிஐயால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட கன்வர்லால் குழுமம் இப்போது வருமானவரித்துறை வலையில் சிக்கியுள்ளது.
வரி ஏய்ப்புப் புகாரையடுத்து, காவ்மன் ஃபார்மா மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள கன்வர்லால் குழுமத்திற்கு தொடர்புடைய 20 இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு வகையான மருந்துப் பொருள்களையும், உணவுப் பொருள்களுக்கான நிறமி ரசாயனங்களையும் தயாரிப்பதுடன், இந்நிறுவனம், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துவருகிறது.
சென்னையில் உள்ள அந்நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகம், மருந்து கிடங்கு உள்ளிட்ட துணை நிறுவனங்களிலும், கடலூர் சிப்காட்டில் உள்ள மருந்து தயாரிப்புப் பிரிவிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.