செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி... இளைஞருக்கு தர்ம அடி - போலீசார் எச்சரிக்கை

Oct 17, 2023 07:27:59 AM

கள்ளக்குறிச்சி அருகே நிதி நிறுவனம் நடத்தி  கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞரை சென்னையில் வைத்து மடக்கிய பாதிக்கப்பட்டவர்கள், ஊருக்கு அழைத்து வந்த தர்ம அடி கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சமீர் அகமது என்பவர் சமீர் குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை துவங்கி, 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் ஒரு வருடத்திற்கு மாதம் 12 ஆயிரம் வீதம் பணம் தருவது உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை நம்பிய 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.  பணத்தை திரட்டியதாக கூறப்படும் சமீர் அகமது முதலில் ஒழுங்காக மாதம் 12ஆயிரம் தந்தவர், பின்னர் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், சமீர் அகமது தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

பணத்தை கொடுத்து ஏமாந்த மக்கள் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் சென்னையில் ஈசிஆர்-ல் அவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரை பிடித்து, சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். தங்கள் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டு, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து தர்ம அடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீர் அகமதுவின் மனைவி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் அவரை மீட்டனர். எஸ்.பி அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவில் புகார் அளிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களை அறிவுறுத்திய போலீசார், சட்டத்தை கையில் எடுக்க கூடாது என எச்சரித்துச் சென்றனர்.


Advertisement
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..
போலி பத்திரம் வைத்து நில மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை கைது செய்த போலீசார்..
புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாளையொட்டி வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள்..
கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் - 2 பேர் கைது
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement