தமிழ்நாட்டை சேர்ந்த 128 பேர் இஸ்ரேலில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் இதுவரை 110 பேர் தமிழகம் அழைத்துவரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
இஸ்ரேலில் இருந்து டெல்லி வழியாக சென்னை விமான நிலையம் வந்த மேலும் 27 பேரை மா.சுப்ரமணியன், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் பேசிய மா.சுப்ரமணியன், வெளிநாட்டில் படிப்பு மற்றும் வேலைக்காக சென்ற தமிழர்களின் தரவுகளை சேமிக்க விரைவில் புதிய இணையதளம் தொடங்கப்படும் என்றார்.