இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு 1500 ரூபாய் உயர்ந்த நிலையில், விலை உயர்வு மேலும் சில வாரங்கள் நீடிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் எங்கு போர் நடந்தாலும் பங்குச் சந்தைகளில் முதலீடு குறைந்து சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும் என்பதால் அதன் விலை உயர்வு தொடர வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
போர் தொடங்கிய கடந்த 7ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் நிலையில், ஒரு கிராம் தங்கம் விரைவில் 6 ஆயிரம் ரூபாயை தொடும் என எதிர்பார்ப்பதாக தங்க விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.