சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏவிஆர் ரவுண்டானா அருகே மிதமிஞ்சிய மதுபோதையில் சாலையின் நடுவே சொகுசுகாரை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கிய நபரை காரின் கண்ணாடியை உடைத்து எழுப்பி போலீசார் அனுப்பி வைத்தனர்.
நீண்ட நேரமாக சாலையின் நடுவில் கார் நின்றிருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, வாகன ஓட்டிகள் அவரை எழுப்ப முயன்றும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவரை எழுப்ப முடியவில்லை.
வேறு வழியில்லாமல் காரின் கண்ணாடியை உடைத்து அவரை எழுப்பியும் சுயநிலைக்கு வராத அவரை கண்ட நண்பர், காருடன் அவரை தள்ளிச்சென்று போக்குவரத்தை சரி செய்தனர்
போதையில் காரை ஓட்டி வந்தவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.