அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே பட்டாசு ஆலை மற்றும் விற்பனை நிலையத்தில் நேர்ந்த தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விரகாலூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான ஆலையில் முப்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட விபத்தில் பட்டாசு தயாரிப்பதற்காக வைத்திருந்த வெடி மருந்துகளும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெடித்து சிதறியுள்ளது.
வெடிசத்தம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்ட நிலையில், பட்டாசு குடோனுடன் சேர்ந்து விற்பனை கடையும் சேர்ந்து தீப்பற்றி எரிந்ததில் படுகாயமடைந்த பதினைந்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.