தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகளை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவைக்கு தாக்கல் செய்வார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.