கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு நெல் ஒரு நாற்று முறையில் இயந்திரம் மூலமாக விவசாயிகள் நடவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இயந்திரம் மூலமாக ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு நாற்று நடும் பணி நடைபெற்று வருகிறது.
இடைவெளி விட்டு நாற்று நடுவதால் களை எடுப்பதையும் இயந்திரம் மூலமாகவே மேற்கொள்ள முடியும் என்பதோடு, நாற்றுகளும் நன்றாக வளரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாய பணிக்கு போதுமான ஆட்கள் கிடைக்காத நிலையில், இயந்திரம் மூலமாக பணிகள் மேற்கொள்வதால் செலவு குறைந்து நஷ்டம் குறையுமென விவசாயிகள் தெரிவித்தனர்.