விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கான்கிரீட் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பேருந்து நிலையம் அருகே உள்ள தரைப்பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2 வாரத்திற்கு முன்பு துவங்கியது.
இந்நிலையில் நேற்று பாலத்திற்கு கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது பாலம் இடிந்து விழுந்தது. அவசர கோலத்தில் பணி நடைபெற்று வருவதே இந்த விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.