செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

லாரி வந்து நின்னுச்சி.. அப்பதான் அந்த விபரீதம் வெடித்து சிதறிய பட்டாசுக் கடை..! 14 உயிர்கள் கருகி பலியான சோகம்

Oct 08, 2023 08:43:16 PM

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் லாரியில் இருந்து பட்டாசுப் பெட்டிகளை இறக்கும் போது பற்றிக்கொண்ட தீயால் பட்டாசுகள் வெடித்துச் சிதறி 14 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தைவிட பாதிவிலைக்கு பட்டாசு விற்ற கடை திடீரென தீப்பற்றிக்கொண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

ஓசூர் பேடரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை மற்றும் குடோன் கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. சனிக்கிழமை மாலை 3.15 மணியளவில் லாரியில் இருந்து பட்டாசுப்பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த போது கடையில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று நாலாபுறமும் பரவியது.

இதைக் கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். சிலர் கடைக்குள் சிக்கிக் கொண்டதால் தப்பிக்க இயலவில்லை.

இந்த தீவிபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் ஒரு சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகி எலும்புக்கூடாகின. பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகளும், டீக்கடையும் பலத்த சேதம் அடைந்தன.

இந்த தீவிபத்தில் 14 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுக் கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. லாரியில் இருந்து பட்டாசு பெட்டிகளை எடுத்து வைக்கும் போது தீப்பொறி பட்டு தீப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீசாரும், தமிழக எல்லையில் ஓசூர் சிப்காட் போலீசாரும் போக்கு வரத்தை சீரமைத்தனர்.

தமிழகத்தை விட கர்நாடகாவில் வரி குறைவு என்பதால் பாதிவிலைக்கு பட்டாசு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் கிருஷ்ணகிரி , ஓசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து பட்டாசு வாங்கிச்செல்வது வழக்கம் என்று கூறப்படுகின்றது. இந்த தீவிபத்து குறித்து விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Advertisement
மதுரை அருகே தைலம் டப்பாவை விழுங்கிய குழந்தை... லாவகமாக டப்பாவை வெளியே எடுத்த மருத்துவக் குழுவினர்
கோவையில் திமுக கனிமொழி எம்.பி. பி.ஏ.வின் தம்பி என்று கூறி மதுபோதையில் போலீசாருடன் இளைஞர் வாக்குவாதம்
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்கச் சென்ற பெண்.. காவலர் என்று கூறி கூலிப்படையுடன் வீடு புகுந்து கொலை முயற்சி
மதுபான பாட்டில்களுக்கு பில் வழங்கும் சோதனை முயற்சி.. முதற்கட்டமாக 7 மதுபான கடைகளில் சோதனைப் பணி
அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும்..? - அமைச்சர் ரகுபதி கேள்வி
தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்.. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த விபரீதம்
நாட்டுத் துப்பாக்கியால் சிறுத்தை சுட்டுக் கொலை.. பா.ம.க பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்த வனத்துறை
பெண்ணுக்கு எலி காய்ச்சல் உறுதி.. நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வரும் மருத்துவ குழுவினர்

Advertisement
Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..


Advertisement