குறுவை நெற்பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கக்கோரி காவிரி பாசன மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாகப்பட்டினம் அவுரித் திடலில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அ.தி.மு.க.வினர், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் உதவி ஆடசியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.