சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கும் பள்ளியில் போதிய அளவிற்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லை என மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் புழு உள்ளதாக தெரிவித்த இரண்டு மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி கண்டித்து, அவர்களை முட்டிப் போட வைத்ததாகவும் கூறப்படுகிறது.