தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது காவிரி பிரச்சனையில் ரயில் மறியலும், ஆளும் கட்சியாக உள்ள போது கூட்டுப் பொறியலாகவும் உள்ளதாக சீமான் தெரிவித்தார்.
கடலூரில், கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான், இலவசங்களுக்கு பதிலாக கல்வியை தரமாக கொடுங்கள் எனவும், இன்னும் 50 ஆண்டுகளுக்கு இலவசம் கொடுத்தாலும் இந்த நாடு அரை அங்குலம் கூட வளராது என சீமான் கூறினார்.