கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து முதலமைச்சரை அவமானப் படுத்துவது கண்டிக்கத்தக்கது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் ஆயக்காரன்புலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி வருவதாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுபடுவதாகவும் தெரிவித்தார்.