தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் நினைவிடத்தில் அவரது வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து கோட்டைக்குள் சென்று பார்வையிட்ட ஆளுநருக்கு கிராம மக்கள் சார்பாக ரோஜா மாலை அணிவித்து வேல் பரிசாக வழங்கப்பட்டது.
பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெண்ணிக்காலாடி மற்றும் ஒண்டிவீரன் நினைவிடத்திலும் ஆளுநர் மரியாதை செலுத்தினார். அப்போது ஒண்டிவீரன் வாரிசுதாரர்கள் சார்பில் ஆளுநருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது