திருச்சியில், அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த பள்ளி மாணவன், தவறி கீழே விழுந்ததில் இடதுகாலின் 4 விரல்கள் துண்டானது.
அத்தாணி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவன் பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பேருந்து எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே வேகத்தடையில் ஏறி இறங்கிய போது படிக்கட்டில் நின்றிருந்த நிஷாந்த் நிலைதடுமாறி கீழே
விழுந்ததில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பள்ளி நேரங்களில் குறைவான அளவிற்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் தான், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதாகவும், எனவே, தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.