காவல்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகையின் காலில் சீமான் விழுந்துள்ளதாக வீரலட்சுமி கூறியுள்ளார்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கிய பின் பேட்டியளித்த அவர், தாம் பேசிய பேச்சிற்கு பயந்து சீமான் உளறிக்கொட்டியதாகவும், தமது படையை திரட்டிக்கொண்டு வந்தால் சீமானால் வட மாவட்டத்தின் எல்லையில் கூட கால் வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோவிலுக்கு வெளியே, வீரலட்சுமியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர், கையில் ஸ்கெட் பேனா ஒன்றை கொண்டு வந்து, ஸ்கெட்ச் போடுறீயா? இந்தா போடு என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி வீரலட்சுமியின் ஆதரவாளர்கள், நாம் தமிழர் கட்சியினரை காலணியாலும் கேமரா ஸ்டாண்டாலும் தாக்க முயன்றனர். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் செங்கலை தூக்கிக் கொண்டு நின்றனர். இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செய்தனர்.