அருப்புக்கோட்டை அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
50 பயணிகளுடன் அருப்புக்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி தனியார் பேருந்து ஒன்று எதிர்புறம் வந்த வாகனத்தை முந்தமுயன்ற போது, லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை இடது புறமாகத் திருப்பியதால் கனமழையால் மண் சரிந்திருந்த சாலையில் ஸ்கிட் ஆன பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.