சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் மினி பேருந்து ஓட்டுநரும், உணவு டெலிவரி செய்யும் ஊழியரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
ஆலம்பாடியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனியார் மினி பேருந்தை ஓட்டிச் செல்லும் போது, சிதம்பரத்தைச் சேர்ந்த உணவு டெலிவரி நிறுவன ஊழியரான கணேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வழிவிடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
உணவு டெலிவரி நிறுவன ஊழியர் கணேஷ், தான் வைத்திருந்த கத்தியால் ஸ்ரீராமை குத்த முயன்றபோது அருகில் இருந்தவர்கள் அவரைத் தடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.