தாங்கள் ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை என்றும் அதில் உள்ள குலக்கல்வி, தீண்டாமை,பெண் அடிமை உள்ளிட்ட கொள்ளைகளைதான் எதிர்க்கிறோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் ஆலயத்தில் அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மண் என் மக்கள் பயணம் படுதோல்வி அடைந்ததால் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குழம்பி போயிருக்கிறார் என்றார்.