தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என அறிக்கை விடுக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய இதனை தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்களின் பணிகளை முடக்கும் வகையில்
பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்களது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.