சேலத்தில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் விடுமுறை எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணி வரன் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது.
கரூர் மாவட்டத்திலும் கரூர், தாந்தோணிமலை, க.பரமத்தி உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றிய அலுவலங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட அலுவலர்கள் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.