திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வீட்டு உரிமையாளரை கட்டிப்போட்டு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளை பிடித்து மீட்கப்பட்ட நகை பணம் ஆகியவற்றை பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தனிப்படை காவலர்களை பாராட்டினார்.
கடந்த 30ந் தேதி சாவடிபாளையத்தைச் சேர்ந்த குணசேகர் என்பவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த போது 7பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகள்,13 லட்சம் ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவைகளை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டது.