தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை கை மற்றும் கால்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
சிவகாசியை சேர்ந்த தனியார் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களை வழங்கினர்.