நாகையில் வெளிமாநில சாராயம் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 450 லிட்டர் சாராய மூட்டைகள், 200 மதுபாட்டில்கள், 5 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திட்டச்சேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நாட்டார் மங்கலம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் இவைகள் பிடிபட்டுள்ளது.
பின்னர் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இது போன்ற தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.