ரேஷன் கார்டு இருக்கும் எல்லோருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா என்று கேள்வி கேட்ட பெண்களிடம் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அவர்,பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மகளிர் உரிமைத் தொகை வரும் 15ந்தேதி வழங்கப்பட உள்ளது என்றார்.