மு.க.ஸ்டாலினை இண்டியா கூட்டணியினர் கைவிட்டு விட்டதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தம்பிதுரை இதனை தெரிவித்தார். உதயநிதியின் சனாதன பேச்சு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, செந்தில் பாலாஜியின் ஊழல் வழக்குகள் போன்றவற்றாலும், ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் ஆட்சி கலைக்கப்படுமோ என்ற பயத்தின் காரணமாகவே ஸ்டாலின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.