செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறையில் நூற்றுக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் அழுகிய உடல்களில் இருந்து வீசும் துர்நாற்றம் காரணமாக நோய்ப்பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இங்கு 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறையில் 40 உடல்களை மட்டுமே பதப்படுத்தும் வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விபத்தில் சிக்கியவர்கள், ஆதரவற்றவர்கள் என நாள்தோறும் அதிகளவில் சடலங்கள் சேர்வதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிணவறையில் சடலங்கள் தரையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நாட்கணக்கில் தேங்கிக் கிடக்கும் இந்த உடல்கள் அழுகி அருகிலுள்ள வார்டுகளில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறப்படுகிறது.