ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டாம் என்பவர்கள் ஊழல்வாதிகள் என்றும், 1971-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
நேற்று, தேனி மாவட்டம் போடியில் என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பொதுமக்களிடையே பேசுகையில் இவ்வாறு கூறினார்.